புதுடெல்லி: கைதிகள் அடையாள சட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா 2022 கடந்த 4ம் தேதி மக்களவையிலும், 6ம் தேதி மாநிலங்களவையிலும் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, எந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், குற்றம் சாட்டப்படுபவர்களின் கை, கால் ரேகைகள், டிஎன்ஏ சோதனைக்காக ரத்தம், தலைமுடி, சளி, எச்சில் என அனைத்து விதமான மாதிரிகள், கண் கருவிழி, புகைப்படங்கள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கின்றது. இந்நிலையில் குற்றவியல் நடைமுறை அடையாள சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.