இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி கொழும்பு அண்டை நகரான ரம்புகனாவில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
மாதத்தில் இரண்டாவது முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் விலை அதிகரித்து 338 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த வாகன ஓட்டிகள் சாலையில் டயர்களை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்து. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.