தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம்.. 89 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்திய 89 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. அப்போது  போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்த கருப்பு கொடிகளையும், பதாகைகளையும் வீசி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.