வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டுப்பற்று மிக்கவர் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையையே கடைபிடிக்கும் என்று ஜெய்சங்கர் கூறியதை வரவேற்றுள்ளார். ரஷ்யாவிடமிருந்து இறக்குமதிகளை குறைத்துக் கொள்ள மேற்கத்திய நாடுகள் நிர்ப்பந்தித்து வரும் நிலையில், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் எது தேவை என்று இந்தியா கருதுகிறதோ அதற்கேற்ப முடிவுகளை சுயமாக எடுக்கும் என்று ஜெய்சங்கர் கூறியதை ரஷ்ய அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளை நம்ப முடியாது என்றும், ஐநா.விதிகளை மதித்து நடக்கிற நட்பு நாடுகளிடம் தான் ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் இந்தியா அத்தகைய ஒரு நாடு என்றும் செர்கய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.