நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் போது மொத்த பங்கு வெளியீட்டில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு? தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு? நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு? ஊழியர்களுக்கு எவ்வளவு என பிரித்து தான் வெளியீடு செய்வார்கள்.
இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கினை ஒதுக்கீடு செய்வார்கள். உதாரணத்திற்கு சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10% பங்கினை ஒரு நிறுவனம் பிரித்து கொடுக்கிறது என வைத்துக் கொள்வோம்.
3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..!
ஆனால் பங்கு வெளியீட்டில் 15% அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும். அதில் 10% பேரை குலுக்கல் முறையில் தேர்தெடுத்து, அவர்களுக்கு 10% பங்குகளை ஒதுக்கீடு செய்வார்கள்.
எப்படி முதலீடு செய்யலாம்?
ஆக ஐபிஓ-வில் விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் பெயரிலும் பிரித்து முதலீடு செய்வது என்பது வாய்ப்பினை அதிகரிக்கும். உதாரணத்திற்கு மனைவி, பெற்றோர் பெயரில் விண்ணப்பிக்கலாம். அதேபோல பெரிய தொகையினை ஒரே பேரில் முடக்காமல் இருப்பதும் நல்லது. அதனை பிரித்தும் முதலீடு செய்யலாம்.
எஃப்பிஓ (FPO)என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பவர், மீண்டும் நிதி தேவைப்படும்போது அவங்க கையில் மீதமிருக்கும் பங்குகளில் தேவையானவற்றை விற்பனை செய்வார்கள். இது ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரிங் என்பார்கள். இதனை உரிமைப் பங்கு என்றும் கூறுவார்கள். சந்தை விலையை விட தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதில் ஏற்கனவே முதலீட்டாளர்களாக உள்ளவர்களும் வாங்கிக் கொள்ளலாம். மற்ற முதலீட்டு திட்டங்களை இந்த திட்டத்தில் நிதி திரட்டுவது நிறுவனங்களுக்கு எளிது.
எஃப்பிஓ- தள்ளுபடி விலையில் கிடைக்குமா?
எஃப்பிஓ- விலும் ஐபிஓ போல ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட விலையில் வெளியிடுவார்கள். ஆக இந்த வாய்ப்பினையும் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கலாம். எனினும் இதில் விலை எவ்வளவு நிர்ணயம் செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பொதுவாக தள்ளுபடி விலையில் கிடைத்தால் வாங்கலாம். பெரும்பாலான நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தான் விற்பனை செய்கின்றன.
நிறுவனம் பற்றி?
அதெல்லாம் சரி, IPO- ஆக இருந்தாலும் சரி, FPO- ஆக இருந்தாலும் சரி? அந்த நிறுவனத்தினை வாங்கலாமா? வேண்டாமா? அந்த நிறுவனம் என்ன செய்கிறது. அது எந்த துறையை சேர்ந்தது. அதன் எதிர்காலம் எப்படியிருக்கு, என்பது உள்ளிட்டவற்றையும் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும்.
Series on the stock market: what is the basis of share allotment in ipo?
Series on the stock market: what is the basis of share allotment in ipo?/சீரிஸ் 5: பங்கு ஒதுக்கீடு என்றால் என்ன.. சிறு முதலீட்டாளர்கள் எப்படி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்!