சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில்,
தமிழக கவர்னர்
ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
டெல்லி செல்லும் கவர்னர் ஜனாதிபதி,
பிரதமர் மோடி
, மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.