அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வராமல் ஓராண்டுக்கு மேல் நீட்டிக்க விரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் ஷோய்கு குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனில் கடைசி மனிதர் போரில் மடியும் வரை ஆயுதங்களை வழங்க பல மில்லியன் டாலர்கள் இறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு பாதுகாப்பு நிதியாக 800 மில்லியன் டாலர் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் அறிவித்தார்.
ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் போரை நீட்டிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.