டெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்தது. விசாரணை முடியும் வரை ஜஹாங்கீர்புரியில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழங்கறிஞர்கள் கபில்சிபல், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. ஜஹாங்கீர்புரி பகுதியில் புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. டெல்லி மாநகராட்சியின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.