பீகார் மாநிலத்தில் பட்டதாரி பெண் ஒருவர், வேலை கிடைக்காத காரணத்தினால் மனம் தளராமல் கல்லூரி வாசலில் தேநீர் விற்று வருகிறார்.
பூர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா குப்தா என்ற பெண், பொருளாதாரம் பயின்ற நிலையில், தான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத நிலையில், அரசு பணிகளுக்கான தேர்வுகளையும் எழுதினார்.
கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு வேலை கிடைக்காத நிலையில், அவரது நண்பர்கள் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து தேநீர் கடை அமைக்க உதவியுள்ளனர்.
தேநீர் விற்க உறவினர்கள் உள்ளிட்டோர் எதிர்மறையாக கருத்து தெரிவித்த நிலையில், மன உறுதியோடு பாட்னாவில் மகளிர் கல்லூரிக்கு அருகே தேநீர் கடை அமைத்ததாக பிரியங்கா குப்தா குறிப்பிட்டார்.
தனது கடையில் மசாலா டீ, சாக்லேட் டீ போன்ற பல்வேறு வகையான தேநீர் விற்கப்படுவதாகவும், கல்லூரி மாணவிகள் தனது தேநீரை நாடி அதிகளவில் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.