பாயல் ராஜ்புத்
தெலுங்கு மற்றும் பஞ்சாபி திரையுலகில் முன்னணி வகிக்கும் நடிகை. கடந்த 2018-ம் ஆண்டு வெளியானஆர்எக்ஸ் நூறு என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போட்டோக்களுக்கென்றே ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சமீப காலமாக பல பிரபலங்கள்
மதுபான விளம்பரம்
மற்றும் ஆணுறை விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
காஜல் அகர்வால்
, சமந்தா, ரெஜினா, பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் மதுபான விளம்பரத்தில் நடித்துள்ளனர். இதனால், நெட்டிசன்கள் அவர்களை கண்டமேனிக்கு ட்ரோல் செய்து செய்தனர்.
இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை
இந்நிலையில் நடிகை பாயல் ராஜ்புத் ஒரு விஸ்கி பிராண்ட் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விஸ்கி விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டிதீர்த்து விட்டனர். இதனால்,கடுப்பான பாயல் ராஜ்புத், இதுபோன்ற விளம்பரங்களில் ஹீரோக்கள் நடிக்கும் போது அமைதியாக இருக்கும் நெட்டிசன்ஸ், ஹீரோயின்கள் நடித்தால் மட்டும் மோசமான கருத்துக்களை பகிர்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், பெண்கள்
மது
அருந்துவதில் தவறில்லை, அவர்களும் மது அருந்துவதை விரும்புகிறார்கள், குளிர்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகள் விளம்பரப்படுத்தப்படுகிறது. அவை சட்டப் பூர்வமானவை என்றும் பாயல் ராஜ்புத் ஒரு துணிச்சலான கருத்தை கூறியுள்ளார் . இவரின் இந்த கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆகி, பலரும் பாயலை திட்டிதீர்த்து வருகின்றனர்.
நடிகை பாயல் ராஜ்புத்தின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை
நைனா கங்குலி
, பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சிகரமானவர்கள், சக்தி வாய்ந்தவர்கள், இதனால் அவர்களை பிராண்ட்கள் தேடி வருகின்றன. மேலும், பெண் மது அருந்த விரும்பினால், அவர்களுக்கு முழுஉரிமையும் உண்டு என கூறியுள்ளார்.
நடிகை பாயல் ராஜ்புத் தமிழில்
ஏஞ்சல்
மற்றும் இருவர் உள்ளம் என்கிற இரண்டு படத்தில் நடித்துள்ளார். அதே போல் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளை தொடர்ந்து கன்னட படத்திலும் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!