றம்புக்கணை பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஈடுபட்டோரை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் உயரிழந்ததுடன் 13 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளான 15 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி மஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அமைதி நிலையை நிலைநாட்டுவதற்காக மீண்டும் அறிவிக்கும் வரையில் றம்புக்கணை பொலிஸ் எல்லைப் பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்காக நேற்று இரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.