பெங்களூரு,
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 41 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடக்கிறது.
இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏப்ரல் 24-ந் தேதி தொடங்கி மே 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது கட்ட பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.