புதுடில்லி : உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக மத்திய சுகாதாரஅமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் குஜராத்தின் ஜாம் நகரில் அமையவிருக்கிறது. இதன் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசிசை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மாண்டவியா வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ‘நம் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தை உலக மக்கள் நலனுக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கலந்து பேசினோம்’ என கூறி உள்ளார்.
புதுடில்லி : உலக மக்கள் நலனுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக மத்திய சுகாதாரஅமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.