வெள்ளச் சூழலை சமாளிக்கத் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைச் சமாளிக்க ஆயத்த பணிகளையும் தொடங்கியுள்ளது அசாம் அரசு.
இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஞானேந்திர தேவ், “மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகால வெள்ளத் தரவுகளின் அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகமிருக்கும் மற்றும் பாதிக்கப்படாத பகுதிகளை கண்டறிந்துள்ளோம். அந்தத் தரவுகளிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் முக்கியமான ஐந்து மாவட்டங்களில் உள்ள 11 வட்டங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகமுள்ள பகுதிகளை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் உண்மையான வெள்ள நிலைமை மே 15 முதல் தொடங்கும். தற்போதைக்கு ஒவ்வொரு மாவட்டமும் அதன் ஆயத்த நடவடிக்கைகளை மார்ச் 15 முதல் தொடங்கியுள்ளது” என்று கூறினார்.
இம்முறை ஒவ்வொரு மாவட்டமும் அவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப்படுத்தப்படும்” என்று கூறினார். மேலும், முன்கூட்டியே அசாமில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், எந்த வித வெள்ளச் சூழலையும் எதிர்கொள்ள அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: “தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம்தான்”- அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM