சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனத்தை நோக்கி கருப்புக்கொடி வீசப்பட்டதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்பட்டது மற்றும் அவரது வாகனத்தின்மீது கருப்புகொடி கம்புகளை வீசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்க விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால், அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்த நிலையில், அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.