விஜய்யின் சமீபத்திய படமான
பீஸ்ட்
கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
நெல்சன்
மற்றும் விஜய்யின் கூட்டணியில் வெளியான பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும் அந்த எதிர்பார்ப்புகளை பீஸ்ட் திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.
என்னதான் படம்
விஜய்
ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுவான ரசிகர்களை பீஸ்ட் திரைப்படம் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் விஜய் தற்போது
வம்சி
இயக்கத்தில்
தளபதி 66
படத்தில் நடித்துவருகிறார்.
நெல்சன் மீது ஏன் இவ்ளோ வெறுப்பு ? ரசிகர்கள் கேள்வி..!
ராஷ்மிகா
நாயகியாக நடிக்க
தமன்
இசையமைக்கும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் 80களில் ரஜினி மற்றும் கமலுக்கு இணையான வெற்றிகளை கொடுத்த மோகன் இப்படத்தில் நடிக்கின்றார்.
தளபதி 66
இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் செம ஹிட்டடித்ததால் விஜய் தளபதி 66 படத்தின் முதல் பாடலையும் அரபிக் குத்து படமாக்கப்பட்ட செட்டில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.
அரபிக்குத்து
அதன் காரணமாகவே தளபதி 66 படத்தின் முதல் நாள் படமாக்கப்பட்ட அந்த பாடல் அரபிக் குத்து செட்டில் எடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் இந்தளவிற்கு செண்டிமெண்ட் பார்ப்பாரா என கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
விஜய் 66; டைரக்டர் சொன்ன நல்ல செய்தி; குஷியில் விஜய் ரசிகர்கள்!