வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மாணவர்களின் உயிரை பொருட்படுத்தாமல் இயக்கிச் சென்ற தனியார் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தத்தில் இருந்து திருவலம் வழியாக ஆற்காடு வரையிலான வழிதடத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த தனியார் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் பேருந்து படிகள் மற்றும் பேருந்து பின்புறத்தில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சோதனையில் ஈடுபட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் தனியார் பேருந்தை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.