Gold Rate in Chennai,Today 22 & 24 Carat Gold Price Per gram in Chennai(INR),Gold Price Movement in Chennai(20 april 2022)
பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவு 105 அடியாகும். நீர்மட்டம் 82.21 அடியாக இருக்கிறது.
நீர் வரத்து 1,411 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 2,800 கன அடியாகவும் இருக்கிறது. நீர் இருப்பு 16.88 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணை நிலவரம்
நீர்மட்டம் 104.99 அடியாக உள்ளது. நீர்வரத்து 3,610 கன அடியாக இருக்கிறது.
நீர் வெளியேற்றம் 1500 கன அடியாகவும், நீர் இருப்பு 71.45 டிஎம்சியாக உள்ளது.
வானிலை நிலவரம்
தமிழகத்தில் வானிலை இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் கிராம் தங்கம் ரூ.5,029க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.5,047க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் ரூ.18 குறைந்துள்ளது.
சவரன் தங்கம் ரூ.40,232 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.144 குறைந்துள்ளது.
24 கேரட் தூயத் தங்கம் கிராமுக்கு ரூ.5,487க்கும், சவரன் கிராமுக்கு ரூ.43,896க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Today Live: தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
கிராம் தங்கம் ரூ.19ம், சவரன் ரூ.152ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“