தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். மகன்கள் யாத்ரா, லிங்காவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்
ஐஸ்வர்யா
.
3 படம் மூலம் இயக்குநரான ஐஸ்வர்யா, 7 ஆண்டுகளாக படமே இயக்கவில்லை. இந்நிலையில் ஓ சாத்தி சல் எனும் பாலிவுட் படத்தை இயக்கவிருக்கிறார்.
மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் அதிக நேரம் செலிவிடவும், அவர்கள் வளரட்டும் என்று தன் கெரியருக்கு பிரேக் விட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
யாத்ரா, லிங்கா வளரட்டும் என்று தான் தனுஷும், ஐஸ்வர்யாவும் காத்திருந்தார்களாம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிவது என்று அவர்கள் முடிவு எடுத்து ரஜினியிடம் கூறியிருக்கிறார்கள்.
என்ன விளையாடுறீங்களா, இரண்டு பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள் என்று ரஜினி சமாதானம் செய்து வைத்தாராம். சரி பிள்ளைகள் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்து காத்திருந்திருக்கிறார்கள்.
மகன்கள் வளர்ந்ததும், இனியும் முடியாது என்று ஆளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிவிட்டார்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும்.
தனுஷுக்கு இருக்கும் ஆசை, ஐஸ்வர்யாவுக்கு இல்லையாமே
மகன்கள் வளர்ந்ததால் ஏற்பட்ட நல்ல விஷயம், ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்குவது. அதே சமயம் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தது கெட்ட விஷயம் என்கிறார்கள் ரசிகர்கள்.
இதற்கிடையே யாத்ராவுக்கும், லிங்காவுக்கும் அப்பாவுடன் இருக்கத் தான் ஆசையாக இருப்பதாக அண்மையில் பேச்சு கிளம்பி அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.