ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு

சென்னை,
ஸ்பெயினில் நடைபெற்ற 48-வது லா ரோடா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில், சென்னையைச் சேர்ந்த குகேஷ் 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். 

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட போட்டியில் தோல்வியின்றி 7 வெற்றிகளையும், 2 டிராக்களையும் அவர் பெற்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். 
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடினமான வீரர்களுக்கு மத்தியில் ஆட்டமிழக்காமல் முதல் ஓபன் பட்டத்தை வென்ற சிறப்பை குகேஷ் பெற்றுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.