சண்டிகர்:
ஹரியானாவில் போலி எரிபொருள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் இரண்டு பேர் போலியாக எரிபொருட்களை தயாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீசார் ஆய்வு செய்தனர். அங்கே டீசல் தயாரிப்பு இயந்திரங்களை கொண்டு போலி டீசல் தயாரித்து வருவது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து சுமார் 75,500 லிட்டர் போலி டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 11 ஆயிரத்து 360 ரொக்கத்தொகையும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் தீபக் மற்றும் ரமேஷ் என்றும், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இருவரும் உயவு அடிப்படை எண்ணெய் (base oil), பாராஃபிங், கனிம டர்பெண்டைன் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு டீசல் தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.