ஆளுநர் கார் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு விழுந்த கரும்புள்ளி என விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற தமிழக ஆளுநரின் வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதனைத்தொடர்ந்து அவர் உரையாற்றும் போது அவையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல் ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் கார் மீதான தாக்குதலை ஆளும் திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்கியதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: ஆளுநரின் கான்வாயை நோக்கி கொடிக் கம்புகள் வீச்சு – டிஜிபிக்கு புகார் கடிதம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM