கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வரும் நிலையில், அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது.
ஆனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைத்தால் ராஜினாமா செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளது மட்டும் அல்லாமல், நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கோரி வருகின்றனர். ஊழியர்களின் இந்த நிலைப்பாட்டில் இந்திய நிறுவனங்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய ஊழியர்கள் மத்தியில் முக்கியமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்போசிஸ் WFH முடிவு: ஐடி ஊழியர்களை அழைக்க 3 கட்ட திட்டம்.. எப்படி இயங்கும்..? யார் முதலில்..?
ஆய்வு
தி ஆபீஸ் பாஸ் என்ற நிறுவனம் இந்திய ஊழியர்கள் மத்தியில் செய்த ஆய்வில் 62 சதவீத ஊழியர்கள் அலுவலகம் செல்ல தயார் என்றும், 28 சதவீத மக்கள் ஹைப்ரிட் மாடலில் வேலை செய்யவும், 10 சதவீத ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
WFH நன்மை
இதேபோல் வீட்டில் இருந்து பணியாற்றுவதால் என்ன நன்மை என்று இந்நிறுவனம் செய்த ஆய்வில் 42 சதவீதம் பேர் அலுவலகத்திற்குச் செல்லும் நேரம், செலவு சேமிப்பு எனக் கூறியுள்ளனர். இதேபோல் 39 சதவீதம் பேர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளனர். 10 சதவீதம் பேர் குடும்பத்துடனும், குழந்தைகள் உடன் அதிக நேரம் செலவழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்களின் கட்டாயம்
இந்த ஆய்வுகள் மூலம் அனைத்து நிறுவனங்களும் அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் தக்க வைக்க ஹை்பிரிட் மாடலை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும், அதேபோல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்க அலுவலகம் பல வகையில் மறுசீரமைப்புச் செய்ய வேண்டியது கட்டாயம்.
வொர்க் ஃபரம் ஹோம்
கொரோனாவுக்கு முன்பு ஊழியர் ஒரு நாள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வாங்குவது பெரும் தலைவலியாக இருந்த நிலையில், தற்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. இதேபோல் ஹைப்ரிட் மாடல் மூலம் நிறுவனத்திற்கும் சரி, ஊழியர்களுக்கும் சரி ஏகப்பட்ட நன்மைகள் இருக்கும் காரணத்தால் நிறுவனங்களும் தற்போது ஆர்வமுடன் ஹைப்ரிட் மாடலை ஏற்று வருகிறது.
ஐடி நிறுவனங்கள்
மேலும் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தற்போது ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலுவலகத்திற்கு வரும் வாய்ப்பை அளித்துள்ளது. ஆனால் அனைத்து ஊழியர்களையும் தங்களது அலுவலகம் இருக்கும் நகரங்களுக்கு அழைப்பதில் உறுதியாக உள்ளது.
சரி வீட்டில் இருந்து பணியாற்றுவதில் அதிகப்படியான நன்மையாக நீங்கள் எதை நினைக்கிறீங்க, மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
why do employees prefer Work From Home, what are the benefits of WFH
why do employees choose WFH, what are the benefits of WFH; WFH மூலம் என்ன நன்மை..? ஊழியர்கள் பதிலால் மனமாறிய நிறுவனங்கள்..!