கவின்
மற்றும்
அபர்ணா தாஸ்
கூட்டணியில் உருவாகும் படத்தின்
ஃபர்ஸ்ட் லுக்
குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின்.
பிக்பாஸ்
மூலம் பிரபலமான இவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிறகு
லிப்ட்
படத்தில் நடித்தார். த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ஆகாஷ் வாணி என்ற வெப் தொடரிலும்,
ஊர்குருவி
என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார்.
இந்த வயசுல தேவையா தலைவரே?: ரஜினி ரசிகர்கள் கவலை
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இவர்களுடன் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவக்கத்தில் தொடங்கியது.
இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவீன காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!