நாளுக்கு நாள் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான பல தடைகளையும் விதித்து வருகின்றன.
இதன் மூலம் ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த முயற்சி செய்தி வருகின்றன.
என்ன தடைகளை விதித்தாலும் ரஷ்யாவோ தனது நிலைபாட்டில் இருந்து பின் வாங்குவதாகவும் தெரியவில்லை.
ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!
பூதாகரமாகியுள்ள பிரச்சனை
ஆரம்பத்தில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சு வார்த்தையானது விரைவில் சமாதானத்தினை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை, இன்னும் பூதாகரமாக கிளம்பியுள்ளது. இரண்டாம் கட்ட போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் வீரர்களை சரணடைய ரஷ்யா வலியுறுத்தி வருகின்றது.
தடைகளை தகர்க்க திட்டம்
ஒரு புறம் போரில் கவனம் செலுத்தி வரும் ரஷ்யா, உலக நாடுகள் தங்களுக்கு எதிராக விதித்து வரும் தடைகளையும் சமாளிக்க அதிரடி திட்டங்களையும் போட்டு வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் ஒரே நிலைபாட்டில் இருந்து வரும் இந்தியா, இருதரப்பும் அமைதி பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என கூறி வருகின்றது.
தடையற்ற வணிகத்திற்கு நடவடிக்கை
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளில் ஸ்விப்ட் தடையும் ஒன்று. இதனால் சர்வதேச அளவிலான பெரிய பண பரிவர்த்தனைகளை ரஷ்யா செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் வீழ்ச்சி கண்ட வணிகத்தினை மீட்க இந்தியாவுக்கு குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் பல தடையற்ற வணிகத்தினை செய்ய, பண பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில், இந்தியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்திய வணிகர்களுக்கு வாய்ப்பு
ரஷ்யாவுடனான வணிகத்தினை பல நாடுகளும் துண்டித்திருந்தாலும், அந்த நெருக்கடியான நிலையினை தங்களுக்கு வாய்ப்பாக இந்தியா மாற்றிக் கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றது. முன்னதாக கடந்த வாரத்தில் ரஷ்யா பல்வேறு உணவு பொருட்கள் உள்ளிட்ட பலவற்றிற்கும் தேவை இருப்பதாகவும், இதற்காக ரஷ்யா நிறுவனங்கள், இந்திய வணிகர்களை நாடியுள்ளதாகவும் CAIT தெரிவித்தது. மேலும் ரஷ்யாவுடனான வணிகத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களும் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
பேமெண்ட் எப்படி?
இந்தியா ரஷ்யா இடையே வணிகத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்றாலும், பேமெண்ட் சேவையை எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் ரஷ்ய அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. ஆக விரைவில் ரூபாய் – ரூபிளுக்கு சரியான தீர்வு காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த வர்த்தக பங்காளி
மேற்கத்திய நாடுகளின் தடையானது இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படும் நிலையில், விரைவில் இதற்கு தீர்வு எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக நட்பு நாடுகளாக இருந்து வரும் ரஷ்யா – இந்தியா இடையேயான வணிக உறவினையும் மேம்படுத்த இந்த நடவடிக்கையானது வழிவகுக்கும். ஆக இதன் மூலம் ரஷ்யாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இந்தியா விரைவில் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Russian officials in talks with RBI to find a solution to payment issue
Russian officials in talks with RBI to find a solution to payment issue./மாஸ்டர் பிளான் போடும் ரஷ்யா.. இந்தியாவுடன் பேச்சு வார்த்தை.. தீர்வு கிடைக்குமா?