தெற்கு போலாந்தில் ஜேஎஸ்டபுள்யு சுரங்க நிறுவனத்தால் பாவ்லோவைஸ் பகுதியில் நியோவெக் என்கிற நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இதன் மேற்பரப்பின் கீழ் சுமார் 3000 அடியில் இன்று அதிகாலை 12.15 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் மீத்தேன் வெடித்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து 13 பிரிவு மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு பணியின்போது 7 பேருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சுரங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும், 7 பேரை காணவில்லை என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் சிலருக்கு நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்களது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போலாந்து பிரதமர் மேட்யூஸ் மொராவெக்கி இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர், இது ஒரு துன்பகரமான சம்பவம் என்றும் சம்பட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடுவதாகவும், மீட்பு நடவடிக்கை மிகவும் கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்..
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்சித்துறையின் முக்கிய அறிவிப்புகள்