குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் தியோதர் என்ற இடத்தில் பால் பொருள் வளாகம், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை, பனாஸ் சமூக வானொலி போன்றவற்றை தொடங்கியதோடு, 100 டன் உற்பத்தி திறனுடைய நான்கு இயற்கை எரிவாயு ஆலைகளுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பால் உற்பத்தியை செய்து வருகிறது, இந்தியா. இந்த பால் உற்பத்தியின் மதிப்பு கோதுமை மற்றும் அரிசி உற்பத்தி மதிப்பில்கூட கிடைப்பதில்லை; மழையின்மை, நீர் பாசன வசதியின்மை போன்றவற்றால் விவசாயிகளின் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கால்நடைகள் வளர்ப்பது வாழ்வாதாரமாக இருக்கும்.
கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு பால் சங்கங்கள் பெண்களை ஈடுபடுத்தி வருகிறது. பனாஸ் பால் பொருள் நிறுவனம் பெண்களின் மேம்பாட்டிற்கு பங்களித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது” என்றார்.