டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை தரப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 12,524 மக்கள் நல பணியாளர்களுக்கு மாதம் ரூ,7,500 ஊதியத்துடன் மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலப் பணியாளர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.