நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது நண்பர்கள் கேலி செய்ததையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் சிறுவயதில் தான் குண்டாக இருந்ததால் நண்பர்கள் கேலி செய்ததாகவும், ஆனால் தற்போது சாதித்து காட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒருநாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் ஒரு மொடலாக போறேன் என்று கூறியதற்கு அனைவரும் கேலி செய்தனர். உன் சைஸ்க்கு உன்னால எல்லாம் எப்படி மொடலாக முடியும் என என்னை கிண்டலாக பேசினார்கள்.
அந்த வெறியில் உடல் எடையை குறைத்தேன், இப்பொழுது மொடலிங்கையும் தாண்டி கதாநாயகியாக ஆகியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
தமிழில் ஹீரோ, மாநாடு படங்களில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.