தெலுங்கு சீரியலில் அறிமுகமாகும் தமிழ் நடிகர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் திரவியம். தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2விலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் பல ரசிகர்களை கொண்டுள்ள இவர், தற்போது தெலுங்கு சீரியலிலும் அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில் 'வண்டலக்கா' என்ற சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் திரவியம். தமிழ் சீரியல்களில் நடிக்க மற்ற மொழிகளில் இருந்து ஹீரோயின்களை இம்போர்ட் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு சீரியலில் நடிக்க சென்றுள்ளார். திரவியம் நடிக்கும் இந்த புதிய தொடர் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.