காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்
தனுஷ்
. அவரை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று தனக்கு தெரிந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் தெரிவித்துள்ளாராம்
லதா ரஜினிகாந்த்
.
இதையடுத்து தனுஷ் தன் கவனத்தை தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பியிருக்கிறார். கொரடலா சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்திய படத்தில் நடிக்கிறார் தனுஷ்.
தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் அதிகாரம் படைத்த தயாரிப்பாளரான தில் ராஜுவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் தனுஷ். தில் ராஜுவின் உறவினர் ஆசிஷ் ரெட்டியின் செல்ஃபிஷ் படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு தனுஷை அழைத்திருக்கிறார்கள்.
அழைப்பை ஏற்று அவரும் கலந்து கொண்டார். தில் ராஜுவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் தனுஷ் என்றால், அது அவரின் கெரியருக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் ரசிகர்கள்.
லதா ரஜினிகாந்த் நெருக்கடி கொடுக்கக் கொடுக்கத் தான் தனுஷுக்கு நிறைய நல்லது நடக்கிறது. அவரால் தனுஷை ஒன்றும் செய்ய முடியாது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தனுஷுக்கு கிடைக்காதது, ஐஸ்வர்யாவுக்கு கிடைச்சுடுமோ?