விலைக்கு வருகிறது உலகின் தனிமை வீடு| Dinamalar

மைனே,-அமெரிக்காவின் மிகச்சிறிய தீவில் அமைந்துள்ள உலகின் தனிமை வீடு, 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவின் கடலோர மாகாணமான மைனேவில், மிகச்சிறிய, ஆள் அரவமற்ற டக் லெட்ஜஸ் தீவு அமைந்துள்ளது. இத்தீவில், 2009ல் 540 சதுர அடியில் ஒரு சிறிய வீடு கட்டப்பட்டது. இதில், ஒரு படுக்கை அறை மற்றும் குளியல் அறை மட்டுமே உள்ளது. இருப்பினும், அறையின் உள்புறம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வீட்டில் தங்கு வோர், பிறர் தொந்தரவுஇல்லாமல் கடலின் அழகை முழுமையாக ரசிக்கலாம். இது ஆள் அரவமற்ற தீவில் இருப்பதால், உலகின் தனிமையான வீடு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த வீடு 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.