குழந்தை பிறந்த கையோடு காஜல் மகனுக்கு பெயரும் வச்சாச்சு
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால் கடந்த 2020ல் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களில் நடித்தும் வந்தார். பின்னர் கர்ப்பமானதால் தான் நடித்து வந்த படங்களில் இருந்து அவரே விலகினார். கர்ப்பகாலம் அனுபவம் பற்றி தொடர்ந்து சமூகவலைதளத்தில் தனது மகிழ்ச்சியை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்கள், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இப்போது குழந்தைக்கு கையோடு பெயரும் என்னவென்று அறிவித்துள்ளனர். குழந்தைக்கு நீல் கிச்சுலு என பெயரிட்டுள்ளனர். நீல் என்றால் வெற்றியாளன் என்று அர்த்தமாம்.