திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கவந்த பிஜேபியினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிங் ஆகியோரின் புகைப்படங்களை பொருத்தவேண்டும் என பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் பாஜகவினர் கணபதிபாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து ஊராட்சி துணைத்தலைவர் முத்துக்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கினர். உடனடியாக புகைப்படங்களை மாட்ட வேண்டும், இல்லையெனில் அதற்கான காரணத்தை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு முன்னதாக ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த பாஜகவினரை அங்கிருந்த திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM