சென்னை தண்டையார் பேட்டை ரவுடி கொலை வழக்கில் 7 இளைஞர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை, தண்டையார் நகரை சேர்ந்தவர் ஜீவன் குமார். 26 வயதாகும் இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.
கடந்த 17ஆம் தேதி இவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்த கார்த்திக், நரேஷ், ஹரிஷ், ஜானகிராமன், நசருல்லா, பவுசன், திவ்ய சந்தோஷ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கடையில் ஜீவன்குமார் மது குடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஜானகிராமனை சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பி உள்ளார். இந்த தகராறில் இந்த கொலை அரங்கேறி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.