கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்கள் மீது, வீட்டு மாடியின் சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
சித்திரை திருவிழாவையொட்டி காலையில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதனைக் காண ஏராளமானோர் திரண்ட நிலையில், பிரபு என்னும் பூசாரியின் வீட்டிற்கு முன்பு சில பக்தர்கள் நின்று தேரோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சுமார் 20 ஆண்டுகள் பழமையான அந்த வீட்டின் மாடியில் இருந்த சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்கு கீழே நின்றுக் கொண்டிருந்த 2 குழந்தைகள், ஒரு திருநங்கை உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.