ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல பாகங்களில் இன்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில்,ஹிக்கடுவை பிரதான வீதியை போராட்டக்காரர்கள் மறித்து டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த வீதியின் ஊடாக பயணித்த சுற்றுலா பயணிகளின் பேருந்தினையும் இடைமறித்து வேறு வழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, பொருளாதார நெருடிக்கடி காரணமாக நேற்றைய தினம் எரிபொருள் விலை மீளவும் அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் மக்கள் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.