பெங்களூரு:இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு தொடர்பான தங்களின் குழப்பம், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணும் நோக்கில், கல்வித்துறை இலவச போன் எண்களை அறிவித்துள்ளது. இது குறித்து, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இம்முறை இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு, நாளை துவங்கி, மே 18 வரை நடைபெறவுள்ளது. மாநிலத்தின் 1,076 தேர்வு மையங்களில், காலை 10:15 மணி முதல், மதியம் 1:30 மணி வரை தேர்வு நடக்கும்.தேர்வெழுத ஆஜராகும் மாணவர்கள், தங்களின் நுழைவு சீட்டை காண்பித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., – பி.எம்.டி.சி., உட்பட, மற்ற போக்குவரத்துக்கழக பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். தேர்வு தொடர்பான குழப்பம், சந்தேகங்கள் இருந்தால், அதை நிவர்த்தி செய்து கொள்ள, இலவச உதவி எண் — 080 – 2308 0864 துவங்கப்பட்டுள்ளது.இந்த தொலைபேசி எண், தினமும் காலை 10:00 மணி முதல், மாலை 5:30 மணி வரை செயல்படும். மாணவர்கள், பெற்றோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, தேவையான தகவல் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு:இரண்டாம் ஆண்டு பி.யூ.சி., தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு தொடர்பான தங்களின் குழப்பம், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணும் நோக்கில், கல்வித்துறை இலவச போன் எண்களை அறிவித்துள்ளது.இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.