வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் பிரபலம்..!

தான் இயக்கிய இரண்டே படங்களில் தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வர துவங்கினார் நெல்சன். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோயிலை படத்தின் மூலம் இயக்குனரான
நெல்சன்
தன் முதல் படத்திலேயே வெற்றி கண்டார்.

அதன் பின் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார். டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யை இயக்கும் மாபெரும் வாய்ப்பை நெல்சன் பெற்றார். அதன் பின் டாக்டர் படமும் வெளியாகி ஹிட்டடித்தது.

KGF 2 படத்தை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்… ரசிகர்கள் ஆதரவு..!

இதைத்தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான
பீஸ்ட்
திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் நல்ல வசூலை செய்து வருகின்றது. இந்நிலையில் நெல்சன் முதன்முதலில் இயக்கிய
வேட்டை மன்னன்
படத்தைப்பற்றி நடிகர்
சிவகார்த்திகேயன்
பேசியுள்ளார்.

நெல்சனின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். சிம்பு மற்றும் ஜெய் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு உருவான வேட்டை மன்னன் படம் சில காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

வேட்டை மன்னன்

இதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன் டார்க் காமெடி கதைக்களத்தில் உருவான படம் தான் வேட்டை மன்னன். நானும் நெல்சன் அவர்களும் பேசிக்கொள்ளும் போது வேட்டை மன்னன் படத்தை ட்ராப் என சொல்லமாட்டோம் என்றார்.

சிலம்பரசன்

இதனைப்பார்த்த ரசிகர்கள் வேட்டை மன்னன் ட்ராப் இல்லை என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளதால் மீண்டும் அப்படம் துவங்கப்படுமா என ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது நெல்சன் பீஸ்ட் படத்தைத்தொடர்ந்து ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66; விஜய் போட்ட கண்டிஷன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.