ரஜினியின் படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும் இனி
ரஜினி
படங்களில் நடிப்பது சந்தேகம் தான் என சிலர் பேசிவந்தனர்.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ரஜினி தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினி இளம் இயக்குனரான
நெல்சன்
உடன் கைகோர்த்தார். இதன் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
வேட்டை மன்னன் ட்ராப் ஆகவில்லை..ட்விஸ்ட் வைக்கும் பிரபலம்..!
இந்நிலையில் நெல்சன் இயக்கிய
பீஸ்ட்
திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ரஜினி சற்று யோசித்து வருவதாக செய்திகள் வந்தன. ஏனென்றால் தற்போது ரஜினி கட்டாய வெற்றியை எதிர்நோக்கியுள்ள நேரத்தில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் சொதப்பியதால் இயக்குனரை மாற்றலாமா என ரஜினி யோசித்துவருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியானது.
நெல்சன்
இருப்பினும் நெல்சன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காரணமாக தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
என்னவென்றால் அனிருத்தின் நெருங்கிய நண்பர் தான் நெல்சன். எனவே அனிருத்தின் மூலம் ரஜினியுடன் நெல்சன் கதைசொல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். நெல்சனின் கதையும் ரஜினிக்கு பிடித்துப்போனது. இருந்தாலும் ரஜினிக்கு ஒரு சிறிய தயக்கம் இருந்தது.
ரஜினி
இளம் இயக்குனருடன் கைகோர்ப்பது பற்றி தயங்கிய ரஜினியை ஐஸ்வர்யாதான் பேசி சரிசெய்ததாக பேசப்பட்டு வருகின்றது.
ஐஸ்வர்யா
மற்றும் அனிருத்தின் அழுத்தமான சிபாரிசினால் ரஜினி நெல்சனை தேர்ந்தெடுத்தாக சிலர் பேசிவருகின்றனர்.
இருப்பினும் ரஜினி எப்போதும் தன் படத்தின் இயக்குனரை அவர் தான் தேர்ந்தெடுப்பார். அந்த விஷயத்தில் ரஜினி குடும்பத்தாரின் பேச்சை எப்போதும் கேட்கமாட்டார். இதெல்லாம் வெறும் வதந்திதான் என்கின்றனர் சிலர். இந்நிலையில் ரஜினி மற்றும் நெல்சன் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடைகிறதா நெல்சன் – ரஜினி கூட்டணி! விரிவான அலசல்!