உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்றுஇ வருடங்கள் பூர்த்தி ஆகிறது.
உயிர்த்த ஞாயிறு தினம் என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான தினமாகும்.
கடந்த 2019ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் ,கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்கயில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் 250இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
சில முக்கிய ஹோட்டல்களுக்கும் பயங்கரவாத தாக்குல் நடத்தப்பட்டது. .
இந்த புனித நாளில் கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் கிறிஸ்தவ மக்களை பெரிதும் கவலை அடையச் செய்தது.
இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட ஆணைக்குழு ஒன்றை ஆரம்பித்தார். அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்