புதுடில்லி : இந்தாண்டு பிப்ரவரியில் ‘இ.பி.எப்.ஓ.,’ எனப்படும் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக, 14.12 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
இது குறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2021 அக்., முதல் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக இணைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதை குறிக்கிறது. இந்தாண்டு பிப்.,ல் தொழிலாளர் சேமநல நிதியத்தில், 14.12 லட்சம் பேர் சந்தாதாரர்களாக ஆகியுள்ளனர். ஜனவரியை விட, பிப்.,ல், 31 ஆயிரத்து 826 பேர் அதிகமாக இணைந்துள்ளனர். பிப்.,ல் மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், குஜராத், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்கள், 67 சதவீத பங்களிப்புடன், 9.52 லட்சம் பேரை இணைத்து முன்னணியில் உள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி : இந்தாண்டு பிப்ரவரியில் ‘இ.பி.எப்.ஓ.,’ எனப்படும் தொழிலாளர் சேமநல நிதியத்தில் புதிதாக, 14.12 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.இது குறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.