சென்னை:
அ.தி.மு.க.
சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் மற்றும் இணைச்செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழக கவர்னர் சமீபத்தில் மயிலாடுதுறை சென்றிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு மற்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை அதிகரித்தல் ஆகியவற்றில் திறம்பட செயலாற்றாத திமுக அரசின் மீது அரசியல் சாசன விதிகளின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு பக்கங்களை கொண்ட விரிவான மனுவானது இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு
அ.தி.மு.க.
சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.