புதுடில்லி,-நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல சுற்று பேச்சு நடத்தியது.
இதன் பலனாக, நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்.கே., நாகாலாந்து சீர்திருத்த தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில், நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் கேகாங்கோ ஆகிய அமைப்புகளுடன், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவற்றுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
புதுடில்லி,-நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.