கீவ் : உக்ரைனின் நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிபர் புடின் அறிவித்துள்ளார். பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைனை தாக்கி வரும் நிலையில், தற்போது மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. மரியுபோலில் உள்ள பிரம்மாண்ட உருக்காலையையும் முற்றுகையை தொடருமாறு ராணுவத்திற்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.