சீனா ஷாங்காய் நகரில் கடும் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு நாளில் 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்துவது, உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் வகையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஒரு கோடியே 20 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வர தடை, கடந்த 14 நாட்களில் தொற்று உறுதியாக பகுதிகளில் இருப்பவர்கள் மட்டும் வெளியே உலாவ அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் சுதந்திரத்தின் சுவையை உணர முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.