வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது, நாட்டின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தினர். துறைமுக நகரான மரியுபோலை கைப்பற்றும் நோக்கத்தில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மரியுபோல் நகர் உக்ரைனில் இருந்து விடுவிக்கப்பட்டது. அந்நகரில் உள்ள அசவ்ஸ்டோல் இரும்பு தொழிற்சாலையை தவிர நகரின் அனைத்து பகுதிகளும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. விரைவில் அந்த தொழிற்சாலையும் தங்களின் பிடியில் வரும் என தெரிவித்துள்ளது.
மரியுபோல் நகரம், ரஷ்யாவின் பிடியில் வந்த ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Advertisement