பிரேசில் நாட்டு அமைச்சர் பென்டோ அல்புகர்க்கைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எத்தனால் தயாரிப்புத் தொழிலில் தொழில்நுட்ப ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.
பிரேசில் அமைச்சருடன் வந்த தொழில்துறையினர், இந்திய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். எத்தனால் உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றில் தொழில்நுட்பம், அனுபவங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும்படி பிரேசில் அமைச்சரை நிதின் கட்கரி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எத்தனால் பயன்பாட்டால் காற்று மாசுபாடும், பெட்ரோலிய இறக்குமதிச் செலவும் குறையும் என நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தத் துறையில் இந்திய – பிரேசில் நாடுகளிடையான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.