ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
அண்மையில் உக்ரைன் மீதான போரின் 2ஆவது கட்டத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பேஸ்கோவ் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முற்றிலும் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களுடன் கூடிய வரைவு அறிக்கையை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், முடிவு அவர்களது கையில் தான் இருக்கிறது எனவும் கூறினார்.
உக்ரைனின் பதிலுக்காக காத்திருப்பதாக கூறிய டிமிட்ரி, ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து உக்ரைன் விலகி வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த உக்ரைன் விருப்பம் காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.