நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் அடுத்த 25 ஆண்டுகளில் அடைய வேண்டிய இலக்குகளையும், குறிக்கோள்களையும் நிர்ணயிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் 15ஆவது குடிமைப்பணிகள் நாள் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பொது நிர்வாகத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.